அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சு.. வேனுக்கு தீ வைத்த விவகாரத்தில் திமுக உடன்பிறப்பு கைது.! - Seithipunal
Seithipunal


விளாத்திகுளத்தில் தனியார் வேனுக்கு தீவைத்த விவகாரத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் ஜெயவீரபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரின் உறவினர் தாஸ். இவர் அதிமுக வேட்பாளரின் பிரசாரங்களுக்காக வேன்களை அனுப்பி வந்துள்ளார். 

இந்நிலையில், அதிமுக - திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 4 பேர் கொண்ட கும்பல் தாஸை தாக்கிவிட்டு, அவரது மூன்று வேன்களுக்கும் தீவைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த விஷயத்தில், காயமடைந்த தாஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் ஜெயவீரபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அழகுபாண்டியனை கைது செய்துள்ளனர். 

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் அதிமுக - திமுக இடையே ஏற்பட்ட பிரச்சனையானது, ரவுடிகள் கட்டப்பஞ்சாயத்து போல மாறி உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரை கார் ஏற்றி கொலை செய்துவிடுவோம் என்று திமுக சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Vilathikulam Vehicle Burned by DMK Culprits due to AIADMK DMK Clash


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal