தூத்துக்குடியில் பரபரப்பு: ராட்சத பள்ளத்தில் புதைந்த வடமாநில தொழிலாளி!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இறக்குமதி செலவை குறைப்பதற்க்காகவும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம் மாவட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் இதற்கான பணிகள் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் நடைபெற்று வருகிறது. 

கடந்த சில மாதங்களாக 24 மணி நேரமும் எந்திரங்கள் மூலம் பூமியை துளையிட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த குழாய்கள் அமைக்கும் பணிகளில் நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் நேற்று மாலை மண்ணில் புதைக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணி மற்றும் மின்சார வயர்களை சரி செய்யும் பணி போன்றவற்றில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது 10 அடிக்கு கீழே இருந்த தொழிலாளர்கள் மீது எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்ததில் பணியில் இருந்த ஒரு தொழிலாளி மண்ணில் மூழ்கி பதற்றத்தில் அலறினார். 

இதனை பார்த்த சக தொழிலாளர்கள் மற்றும் மேலே நின்று கொண்டிருந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒப்பந்தக்காரர்கள் உட்பட அனைவரும் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி மண்ணில் புதைந்த வடமாநில தொழிலாளியை மீட்டனர். 

மண்ணில் புதைந்த தொழிலாளிக்கு காயம் எதுவும் ஏற்படாததால் சக தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi north state worker buried riots


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->