காதலியின் திருமணத்தை நிறுத்திய காதலன்.. பரோட்டா கடையை பஞ்சராக்கிய சொந்தங்கள்.. சிறப்பான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


காதலிக்கும் நேரத்தில் எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய காதலனின் பரோட்டா கடையை பெண்ணின் உறவினர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி இலுப்பையூரணி ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பரோட்டா கடை உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், வடக்கு திட்டன்குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பிரகாஷ் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

பெற்றோர்கள் தனது மகளிடம் பேசியதை தொடர்ந்து, பிரகாஷ்ராஜுடன் பெண் பேசுவதை அந்தப் பெண்மணி நிறுத்தி விட்ட நிலையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பிரகாஷ் வரன் கேட்டு இருக்கிறார். பெண்ணின் குடும்பத்தினர் தனது மகளுக்கு மற்றொரு இடத்தில் வரன் பார்த்து பேசி முடித்துவிட்டதாக கூறவே, அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் பழிவாங்க பிரகாஷ் திட்டமிட்டு இருக்கிறார். 

இதனையடுத்து அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த மாப்பிள்ளையின் அலைபேசி எண்ணை பெற்று, காதலியுடன் காதலித்த நேரத்தில் எடுத்த புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பியுள்ளான். இதனைப்பார்த்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடவே, பெண்ணின் திருமணம் நின்று போனதால் ஆவேசமான பெண்ணின் சகோதரர் பேச்சிபாண்டி தலைமையிலான உறவினர்கள், பிரகாஷின் பரோட்டா கடைக்குள் சென்று கடையை சூறையாடியுள்ளனர். 

தன்னை விட்டால் போதுமென பிரகாஷ் ஓட்டம் பிடித்த நிலையில், அவன் வீட்டிலும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடும்பத்துடன் பிரகாஷ் தலைமறைவாக உள்ளார். மேலும், காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதால், தான் நாடோடி போல் வாழ்ந்து வருவதாக டி.ஜி.பிக்கு ஆடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார். 

பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணின் சகோதரர் பாண்டி உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக தெரியவருகிறது. மேலும், பெண் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் இல்லை என்று தெரிவித்த பின்னரும், பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தால், உண்மையான கிளைமாக்ஸ் என்ன நடக்கும் என்பது நிஜத்தில் நடக்கும் போதுதான் அது தெரியும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Kovilpatti Near Thoothukudi Restaurant Owner Disappearance due to Love Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal