தூத்துக்குடி: பைக்கை திருடி செல்லும் மிட் நைட் திருட்டு புள்ளிங்கோஸ்.. காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை 3 பேர் கொண்ட கும்பல் திருடி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பவுல்பாண்டி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும், இரவு வேளைகளில் நோட்டமிட்டு செல்லும் திருட்டுக்கும்பல், மறுநாள் திருட்டு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், தூத்துக்குடி பவுள்பாண்டி நகர் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. 3 பேர் கொண்ட திருட்டு கும்பல், இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் வீடியோ காட்சிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து, அப்பகுதியில் மக்கள் நிம்மதியாக இருக்கும் வகையில் திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Bike Theft Video Released Social Media 9 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal