நள்ளிரவு கொழுந்துவிட்டு எறிந்த பைக்.! மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் பாத்திமா நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் திலக்(வயது 16). இவர் மீன்பிடி துறைமுகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

நேற்று மாலை தாமஸ் நகர் பூங்காவில்  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளர்.  நள்ளிரவில் அவரது மோட்டார் சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. 

உடனே அருகில் இருந்த மக்கள் திலக்கிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அவர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமாகியது. 

இதுதொடர்பாக, திலக் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை தீவைத்து கொளுத்திய மர்மநபரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi bike fire case


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->