13 நாட்களில் 2-வது தூக்கு தீர்ப்பு: நெல்லை போக்சோ கோர்ட்டின் கடும் எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மரம் வெட்டும் தொழிலாளியாக வாழ்ந்து வந்த ஒருவர், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை கடந்த 2024 ஆம் ஆண்டு, வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் ஐந்து மாத கர்ப்பிணி என்பது அதிர்ச்சியூட்டும் வகையில் கண்டறியப்பட்டது.இதையடுத்து, வள்ளியூர் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முக்கிய கட்டமாக மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், குற்றவாளியின் டிஎன்ஏவும், கருவில் உருவான குழந்தையின் டிஎன்ஏவும் முழுமையாக ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், நேற்று தீர்ப்பளிக்கையில்,“குறைந்தபட்ச தண்டனை வழங்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தையும் அவரது தாயும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ளனர்.

சொந்த மகளையே மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் மனிதத்தன்மையற்றது. எனவே, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது”
என்று கடுமையாக தெரிவித்தார்.
13 நாட்களில் 2-வது மரண தண்டனை தீர்ப்பு
நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சுரேஷ்குமார் வழங்கிய மரண தண்டனை தீர்ப்புகள் தொடர்ச்சியாக கவனம் ஈர்த்து வருகின்றன.
கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய 47 வயது தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்புக்கு சரியாக 13 நாட்கள் கழித்து, நேற்று மீண்டும் ஒரு பெற்ற மகளை சீரழித்த கொடூர வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக,2024 செப்டம்பர் 26-ஆம் தேதி, தென்காசி மாவட்டம் உடைப்பங்குளம் பகுதியில் நடந்த மூவர் படுகொலை வழக்கில், பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
2024 மார்ச் 6-ஆம் தேதி, நெல்லை பாளையங்கோட்டை அருகே சாட்சியைக் கொலை செய்த வழக்கில், செல்வராஜ் என்பவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
2019-ல் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற மாயாண்டிக்கு, 2024 நவம்பர் 5-ஆம் தேதி சாகும் வரை சிறை.
2023-ல் பள்ளி மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய ஜகுபர் உசேனுக்கு, ஜூலை 15-ஆம் தேதி சாகும் வரை சிறை தண்டனை.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்களில், தண்டனை தவிர்க்க முடியாது என்ற கடும் செய்தியை இந்த தீர்ப்புகள் வலியுறுத்துகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Second death sentence 13 days stern warning from Nellai POCSO court


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->