திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: ‘அன்றே உத்தரவு அமல்படுத்தியிருந்தால் பிரச்சனை இல்லை’ - நயினார்
Thiruparankundram lamp post issue There would no problem if the order implemented that very day Nainar
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது,"திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தீபத்தூண் வழக்கில் அன்றே நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தால், இவ்வளவு குழப்பமும் சர்ச்சையும் ஏற்பட்டிருக்காது.
தி.மு.க. அரசு ஒவ்வொரு விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுகிறது; பின்னர் நீதிமன்ற தீர்ப்பே பிடிக்கவில்லை என்றால், அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரான போக்கு.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளின் கூடாரமாக மாறியுள்ளது.
வேலைக்கே செல்லாதவர்களுக்கும், தகுதியற்ற நபர்களுக்கும் 100 நாள் வேலை பெயரில் ஊதியம் வழங்கப்படுவதாகவும் அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்".இவ்வாறு அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Thiruparankundram lamp post issue There would no problem if the order implemented that very day Nainar