மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடருக்கான அட்டவணை வெளியீடு; தகுதி பெறும் 04 அணிகள் எது..?
The schedule for the Womens T20 World Cup Qualifier tournament has been released
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கனவே 06 அணிகள் தகுதிப் பெற்றுள்ள நிலையில், இன்னும் 04 அணிகள் தேர்வு செய்யப்படவுள்ளன.
இதற்கான தகுதிச் சுற்று நேபாளத்தில் வருகிற 14-ந்தேதி முதல் பிப்ரவரி 01-ந்தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இதற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தகுதிச் சுற்று தொடரில் 10 அணிகள் பங்கேற்கும், 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 05 அணிகள் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்துள்ள அணிகள் அதே பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி, முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் அணி சூப்பர் 06 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 06 பிரிவில் 06 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பைத் தொடருக்கான முதன்மை சுற்றுக்கு இடம் பெறும்.
அந்தவகையில், "ஏ" பிரிவில் வங்கதேசம், அயர்லாந்து, நமீபியா, பபூவா நியூ கினியா, அமெரிக்கா அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன. அதன்படி, தகுதிச் சுற்று தொடருக்காக 10 பயிற்சி ஆட்டங்களுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடக்கிறது. 18-ந்தேதி தகுதிச் சுற்று தொடரின் லீக் ஆட்டங்கள் தொடங்குகின்றன.
English Summary
The schedule for the Womens T20 World Cup Qualifier tournament has been released