'பாஜக ஒரு முட்டாள் கட்சி' என்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக, மும்பை பாஜக தலைவர் அமீத் சதம், குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவந்த் பதிலளித்துள்ளதாவது:

மும்பையில் முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளதாக பாஜக தலைவர் அமீத் சதமின் குற்றச்சாட்டு, ஆராய்ச்சி மற்றும் புரிந்து கொள்ளும் ஆகிவற்றின் பலவீனம் கொண்ட நபரின் மனநிலை என்பதை பிரதிபலிக்கிறது என்று விமர்சித்துள்ளார். 

அத்துடன், பாஜக-வும், சதமும் தூங்கும் போதும், கனவு காணும்போதும் கூட முஸ்லிம்களை மட்டுமே பார்க்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார். மேலும், கடவுள் ராமரை பெயரை அவர்கள் உச்சரிப்பதில்லை. அதற்குப் பதிலாக தொடர்ந்து முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதது போது, அவருக்கு இந்த புள்ளி விவரம் எங்கிருந்து கிடைத்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினால், அதற்காகத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு ஆய்வு இல்லாமலும், சரியான தகவல் இல்லாலும் பேசும் பாஜக, ஒரு முட்டாள் கட்சி என்று விமர்சித்துள்ளதோடு, அவர்கள் வோட் ஜிகாத் என்ற வார்த்தையை பயன்படுத்துவன் மூலம் வாக்காளர்களை இழிவுப்படுத்துகின்றனர் என்று சச்சின் சவந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Congress spokesperson says the BJP is a foolish party


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->