சமீர் ரிஸ்வியின் அதிரடி; நடராஜன், லுங்கி இங்கிடியின் அபார பந்துவீச்சு; லக்னோவை வீழ்த்தி வெற்றிபெற்ற டெல்லி அணி..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 04 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஐந்தாவது லீக் ஆட்டமாக லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று லக்னோ மைதானத்தில் நடைபெறத்து.

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மாத்திரம் எடுத்தது. 

அணி சார்பாக முதலில் களமிறங்கிய கேப்டன் பந்த் 07 ரன்களில் ரன் அவுட் மூலம் வெளியேறினார். மிட்சல் மார்ஸ் 35 ரன்களிலும், மார்க்ரம் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

அதிகம் ஏதிர்பார்க்கப்பட்ட பூரான் 08 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அதிகபட்சமாக அப்துல் சமத் 36 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டெல்லி அணி சார்பாக, நடராஜன் , லுங்கி இன்கிடி தலா 03 விக்கெட்டினையும், குல்தீப் யாதவ் 02 விக்கெட்டினையும், அக்சர் 01 விக்கெட்டினை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியிலும் தொடக்க வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர். குறிப்பாக ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்துலேயே சமியின் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் அக்சர் படேல் றன் எதுவுமே எடுக்காமல் சென்றார். மிட்டில் ஓவரினுள் வந்த சமீர் ரிஸ்வி 70 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 39 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு எடுத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi defeats Lucknow to secure victory powered by Sameer Rizvis explosive innings


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->