'மிஸ் இந்தியா' அழகிப் போட்டிக்கு தேர்வானப்போது தந்தையிடம் சரமாரிய அடி வாங்கினேன்; இளமைக்கால கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ள பாஜக முன்னாள் அமைச்சர்..!
Former BJP minister Smriti Rani shares her childhood experiences of not getting beaten up by her father when she was selected for the Miss India beauty pageant
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல நடிகையுமான ஸ்மிருதி இரானி, அரசியலுக்கு வருவதற்கு முன்பாக அவர் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். திருமணத்திற்கு முன் ஸ்மிருதி மல்ஹோத்ராவாக இருந்த காலத்தில், பெண்கள் பாரம்பரியமான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அவரது குடும்பத்தில் நிலவியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தானே பகுதியில் குடும்பத் தொழில் நிறுவனம் வாங்குவது தொடர்பாக நடந்த ஆலோசனையின் போது, அவரது கருத்துக்கு குடும்பத்தில் எந்த மரியாதையும் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த ஸ்மிருதி, அப்போது, 'இவர்களுடன் தொடர்ந்து பணிபுரிந்தால் எனக்கு எப்போதும் மரியாதை கிடைக்காது'. என்று எண்ணி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க அவர் முடிவு செய்தார்.

அதன்பின்னர் மாடலின், மற்றும் சினிமா திரைக்குள் நுழைந்து தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழாத தொடங்கி, பின்னர் அரசியலிலும் கால்பதித்துள்ளார். பின்னர் படிப்படியாக முன்னேறி பாஜகவில் கல்வித்துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார்.
தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்மிருதி இரானி, தனது இளமைக்கால கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், தான் 'மிஸ் இந்தியா' அழகிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட தருணம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, அழகிப் போட்டிக்கு நான் தேர்வான தகவல் கிடைத்ததும் அவரது தந்தை கடும் ஆத்திரமடைந்ததாகவும், தன்னை முட்டாள் என்று திட்டியதுடன், கவர்ச்சி உலகம் என்பது கீழ்த்தரமான மனிதர்களுக்கானது எனக் கூறி சரமாரியாக அடித்ததாகவும், தனது இளமைகால பழைய நினைவுகளை உருக்கமாக பேசியுள்ளார்.
English Summary
Former BJP minister Smriti Rani shares her childhood experiences of not getting beaten up by her father when she was selected for the Miss India beauty pageant