சல்மான் கானுக்கு ஜோடியாக மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா..! - Seithipunal
Seithipunal


தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்தது பிரபலமானவர் தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து 2023-இல் வெளியான 'ஜவான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்நிலையில், இன்று நயன்தாரா நடிக்கும் இரண்டாவது இந்தி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபாஸ் நடித்த 'முன்னா', ஜூனியர் என் டி ஆர் நடித்த 'பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த 'யவடு' மகேஷ்பாபு நடித்த 'மஹரிஷி' போன்ற படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் மிழில் கார்த்தி நடிப்பில் 'தோழா',  விஜய் நடித்த 'வாரிசு' படத்தையும் இயக்கியுள்ளார்.

இப்போது இவர் அடுத்து இந்தியில் சல்மான் காகானை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் உருவாகும் படம் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாக உள்ளது. 

தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளும், மும்பையில் உள்ள  SRPF Ground-இல் பெரிய நகரம் ஒன்றை செட் ஆக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் 14 முதல் இதன் படப்பிடிப்பு தொங்கும் என கூறப்படுகிறது.  தற்போது, சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் 'Maatrubhumi: May War Rest in Peace' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nayanthara Returns to Bollywood Opposite Salman Khan


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->