கருணாநிதி போல் தண்டவாளத்தில் படுத்த மன்சூர் அலிகான்!தேர்தல் பரப்புரைக்கு நடுவே கல்லக்குடியில் மன்சூர் அலிகான் ‘ஸ்டண்ட்’ !
Mansoor Ali Khan lies on the tracks like Karunanidhi Mansoor Ali Khan performs a stunt in Kallakudi amidst election campaigning
தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராக அறியப்படும் மன்சூர் அலிகான், தனது வித்தியாசமான செயல்களால் அடிக்கடி கவனத்தை ஈர்த்து வருபவர். தற்போது அவர் செய்த புதிய செயல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான மன்சூர் அலிகான், அதன் பிறகு பல படங்களில் வலுவான எதிரி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், தனது கருத்துகள் மற்றும் செயல்களால் தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சிக்கு சென்றிருந்த மன்சூர் அலிகான், கல்லக்குடி ரயில் நிலையத்தில் பரபரப்பான செயலில் ஈடுபட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தியதை நினைவுகூர்ந்து, அதேபோல் தானும் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் செய்தார்.
அப்போது “கலைஞரும் இப்படித்தான் செய்தார்” என்று கூறிய அவர், தனது செயலால் அங்கு இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிலர் இதை விமர்சித்து வர, இன்னும் சிலர் இதை அரசியல் கவனம் ஈர்க்கும் முயற்சியாகக் கருதுகின்றனர்.
English Summary
Mansoor Ali Khan lies on the tracks like Karunanidhi Mansoor Ali Khan performs a stunt in Kallakudi amidst election campaigning