வெற்றிமாறன் - சிம்புவின் கூட்டணியில் உருவாகும் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்; வெளியான புதிய தகவல்..!
Vijay Sethupathis Role in Arasan Movie
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'அரசன்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
'அரசன்' படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ஆன்ட்ரியா, கிஷோர், விக்ராந்த், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.
அதன்படி விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.
இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் ஜூன் மாத தொடக்கத்தில் நிறைவடையும் என கூறப்படுகிறது. படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Vijay Sethupathis Role in Arasan Movie