ராஜ்பவனில் இன்று அரசியல் அதிர்வு: ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசியலில் இன்று முக்கியமான திருப்பமாக, எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, காலை 11 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த நேரடி சந்திப்பின் போது, அமைச்சர்கள் தொடர்புடைய பல்வேறு முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடம் நேரில் சமர்ப்பிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், இந்த சந்திப்பில் மையப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் விவகாரத்தில் அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படாதது குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல், அமைச்சர் துரைமுருகன் மீது சுமத்தப்படும் மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி மதிப்பிலான முறைகேடு குறித்த புகாரும் விரிவாக முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புகார் மனுக்கள், மாநில அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளுநர் இந்த விவகாரங்களில் எவ்வாறு நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political tremor Raj Bhavan today Edappadi Palaniswami meet Governor


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->