'தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு நல்ல தொடக்கம்'...! - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நெகிழ்ச்சி...!
This good start history Tamil Nadu politics Congress MP Jyothimani
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைதளப் பதிவில், “அரசியல் கருத்து வேறுபாடுகள் எவ்வாறிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு தனித்துவமான பண்பாடும் செழுமையான கலாச்சார மரபும் உள்ளது.
அந்த தமிழர் மரபை மதித்து உயர்த்திப் பேணியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஏழு ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்ட காலத்தில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நெருக்கமாக அறிந்திருக்கிறேன்.
மிகுந்த மனிதநேயமும் ஜனநாயக பண்பும் கொண்ட தலைவராக அவர் திகழ்கிறார். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே அன்பும் எளிமையும் கலந்த அணுகுமுறையோடு அனைவரிடமும் பழகக்கூடியவர்” என்றும் தெரிவித்துள்ளார்.அதோடு, “இந்த சந்திப்பிற்கு முழுமையாக தகுதியானவர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது நல்லிணக்கத்தை விதைக்கும் அழகிய தொடக்கமாக அமைய வேண்டும். அரசியலில் கட்சித் தகராறுகளைத் தாண்டி பரஸ்பர மரியாதையும் அன்பும் நிலைத்திருக்க வேண்டும்.
அதுவே நல்லிணக்கமான சமூகத்திற்கும் உயர்ந்த ஜனநாயக பண்பாட்டிற்கும் அடித்தளமாக அமையும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
This good start history Tamil Nadu politics Congress MP Jyothimani