டாக்குமெண்ட் சரியாக இருந்தும் இலஞ்சம்.. முந்திக்கொண்ட ஓட்டுனருக்கு கட்டிங்.. மொத்தமாக ஆப்படித்த மாவட்ட நிர்வாகம்..! - Seithipunal
Seithipunal


லாரி ஓட்டுனரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் வட்டாட்சியர் லட்சுமி பிரபா. இவர் பர்மிட் வாங்கி சென்ற எம்.சாண்ட் லாரியை மடக்கி, ஆர்.சி புத்தகத்தை கைப்பற்றி ரூ.8000 வேண்டும் என்று லாரி ஓட்டுனரிடம் கேட்டுள்ளார். 

ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பதால், லட்சுமி பிரபாவிடம் பணத்தை ஏ.டி.எம்மில் எடுத்து வருவதாக கூறிய லாரி ஓட்டுநர், இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இலஞ்ச ஒழிப்பு துறையினர் அறிவுறுத்தலின் பேரில், திருவாரூரில் உள்ள வட்டாட்சியர் தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஓட்டுநர், லட்சுமி பிரபாவிடம் இரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார். 

அப்போது வட்டாட்சியர் அருகில் இருந்த கார் ஓட்டுநர், வேகமாக முந்திக்கொண்டு தனக்கும் ரூ.2 ஆயிரம் வேண்டும் என்று பணத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். 

இதனைத்தொடர்ந்து, ஜாமீன் கிடைக்காத வழக்கில் லட்சுமி பிரபாவை கைது செய்த நிலையில், சொந்தப் பிணையில் வெளியே வந்துள்ளார். அவரது கார் ஓட்டுனரையும் விடுதலை செய்த நிலையில், இலஞ்ச ஒழிப்புத் துறையினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு அவர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்தனர். 

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு, இலஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் லட்சுமி பிரபா மற்றும் அவரது கார் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur VAO Suspended by District Administration due to Bribery Issue


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal