கடனை கேட்டு தொந்தரவு.. விபரீத முடிவெடுத்த பெண்மணி.. ஊசலாடும் உயிர்.. கண்ணீரில் குழந்தைகள்.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் ஐயனார் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 35). இவர்கள் இருவருக்கும் அபிநயா என்ற 12 வயது மகளும், மாதேஷ் என்ற 8 வயது மகனும் உள்ளனர். ஐயப்பன் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இவர்கள் கடந்த 5 வருடத்திற்கு முன்னதாக சொந்த வீடு கட்ட துவங்கிய நிலையில், தனியார் வங்கி மற்றும் நிதி நிருவனத்திடம் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை மாதம் தோறும் தவணை முறையில் செலுத்தி வந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்துள்ளனர்.

இதனால் அன்றாட செலவிற்கே பணம் இல்லாது தவித்த சூழலில், மாதம் தோறும் பணம் கட்ட இயலாமல் தவித்துள்ளனர். மேலும், கடனை கேட்க வருபவர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க இயலாமல் கணவன் - மனைவி தவித்து வந்துள்ளனர்.

விரக்தியின் உச்சிக்கு சென்ற தனலக்சுமி, உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

இந்த விஷயம் குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர், 80 விழுக்காடு தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த பெண்மணியிடம் வாக்குமூலம் கேட்டனர். இதில், கடன் பணம் கொடுத்தவர்களின் நெருக்கடியை சமாளிக்க இயலாது தீக்குளித்து தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் சுய உதவி குழுவில் இருந்து, வங்கி கடன்கள் வரை யாரும் பயனாளர்களை பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த சோகம் அரங்கேறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur girl suicide attempt due to Loan Torture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->