திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி பௌர்ணமி கிரிவலம்.. சிறப்பு ரயில்கள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

மேலும், ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் சித்திரை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை மறுநாள் வியாழக்கிழமை இரவு 11.59 மணிக்கு தொடங்கி மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகின்றது. 

இந்த நிலையில் முக்கிய பௌர்ணமி தினங்களில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த வகையில் வேலூர் மற்றும் விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் வேலூரில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 .5 மணிக்கு திருவண்ணாமலை சென்று அடைகிறது.

அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்படும் ரயில் 5: 35 மணிக்கு வேலூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai Chithra pournami special train service


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->