கணவன் வாங்கிய கடனால் மன உளைச்சல்... திருத்தணி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கணவன் வாங்கிய கடனால் மனமுடைந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் தூய தேவி (வயது 38). இவர் திருத்தணி முருகன் கோவிலில் பெண் அதிகாரியாக பணியாற்றி வரும் நிலையில், தனது கணவர் ப்ரகாஷுடன் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் முருகாரெட்டி பகுதியில் வசித்து வருகிறார். 

இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், பிரகாஷ் கான்ட்ராக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில்கள் முடங்கிய நிலையில், பிரகாஷுக்கு ரூ.30 இலட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. 

இதனால் கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று வழக்கம்போல தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு சென்ற தூய தேவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

இவரது உடலைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தூய தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Thiruttani Murugan Temple Officer Devi Suicide due to his Husband Loan Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->