திருவள்ளூரில் 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல்.. மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து இருந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு அனுமதி வழங்கியுள்ள டாஸ்மாக் பார்களில் போலி மதுபானங்கள் விற்கப்படுவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்தது.

அரசு டாஸ்மாக் பாரில் இருவர் உயிரிழந்தது மற்றும் கள்ளச்சாராயத்தால் 23 பேர் உயிரிழந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பணியாற்றி வந்த 16 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 42 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோன்று தமிழக முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த பணியிட மாற்றங்களுக்கு கள்ளச்சாராய விவகாரமே முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 75 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் 75 டாஸ்மாக் பார்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur District SP order Sealing of 75 Tasmac bars


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->