திருப்பூர்: 5 வருஷமா எஸ்பிஐ நகைக்கடன் வாங்கியவர்களை பதறவைத்த பலே கில்லாடி வழக்கின் முக்கிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர் சேகருக்கு எதிராக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர்: கடந்த 2017 முதல் 2022 வரை கேத்தனூர் எஸ்பிஐ வங்கியின் நகைக் கடன் பிரிவில் பணியாற்றிய சேகர் (வயது 57), வாடிக்கையாளர்களின் நகைகளில் இருந்து நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டார். 

அதாவது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் இருந்து சிறிய பாகங்களை வெட்டி எடுத்ததும், எடை குறைவாக இருப்பதை கண்டறிந்து புகார் அளித்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் வங்கி மேலாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய, பின்னர் 2022 மார்ச் 12ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையின் போது, சேகர் ரூ.8 கோடி மதிப்பிலான நகைகளை திருடியது உறுதியானது. தொடர்ந்து இந்த வழக்கை 2024 ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது. 

மேலும், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சேகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruppur SBI Gold Loan Forgery case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->