திப்ராயப்பேட்டை கருமாரியம்மன் ஆலய செடல் திருவிழா..MLA அனிபால் கென்னடி பங்கேற்பு! - Seithipunal
Seithipunal


உப்பளம் திப்ராயப்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய செடல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில்  அனிபால் கென்னடி ஏம்எல்ஏ பங்கேற்று வழிபாடு செய்தார். 

புதுச்சேரி,உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட திப்ராயப்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டு செடல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு பக்தர்களின் உற்சாகத்துடன் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றார்.

இந்நிகழ்வில் திமுக தொகுதி அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், கிளை செயலாளர்கள் ரவிகுமார் மற்றும் ராகேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiprayappettai Karumariyamman Temple Festival.. MLA Anibal Kennedys participation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->