#திண்டிவனம் : பொங்கல் கொண்டாட்டம்.. அரசு பேருந்தில் ஏறி ஆட்டம் போட்ட கல்லூரி மாணவர்கள்.!
Thindivanam college students atrocity in Govt Bus
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அப்போது, கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லூரி சாலைக்கு வந்து அங்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் மேற்கூறையில் ஏறி மேல தாளத்துடன் பாட்டு பாடி நடனம் ஆடினார்கள்.

பறை இசை அடித்து அரை மணி நேரமாக அங்கிருந்து நகர விடாமல் அட்டகாசம் செய்தார்கள். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த கல்லூரி மாணவர்களின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் பலரும் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று வேறு வாகனங்களில் பயணிக்க ஆரம்பித்தனர்.
இது போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது. சமீப காலமாகவே பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஒழுக்கம் இல்லாத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
English Summary
Thindivanam college students atrocity in Govt Bus