பள்ளி மாணவியின் வாழ்க்கையோடு விளையாடிய கள்ளக்காதலன்...! புகார் கொடுத்ததும் அதிரடி நடவடிக்கை... போக்சோவில் சிக்கிய நபர்...! - Seithipunal
Seithipunal


சேலம் புத்திரகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இதனால் சிறுமி தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.இந்த நிலையில், சிறுமியின் தாயாருக்கு அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறிய நிலையில், வீரமணி அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது.இதனிடையே, கடந்த 10-ம் தேதி பள்ளியில் மாணவிகளுக்கான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில், தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லை குறித்து சிறுமி தைரியமாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சம்பவம் தொடர்பாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணையை தொடங்கி, வீரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தற்போது தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் வீரமணியை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thief who played life schoolgirl Action taken after complaint Person caught POCSO


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->