அக்காவுக்குக் கல்யாணக் கனவு... தங்கைக்கு நேர்ந்த கொடூரம்...! - அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாப பலி... கண்ணீரில் உறைந்த குடும்பம்!
dream marriage Sister tragedy Young woman dies tragically after being trapped under wheels government bus Family tears
திருமணப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டிருந்த சகோதரிகள், திருமணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது நேரிட்ட கோர விபத்தில், இளம்பெண் ஒருவர் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள்கள் கீர்த்திகா (26), சர்மிளா (23). இருவரும் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்துவிட்டு வீட்டில் இருந்து வந்தனர்.

இதில் மூத்த மகள் கீர்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிந்திருந்தது. வரும் அக்டோபர் மாதம் அவரது திருமணம் நடைபெற இருந்ததால், குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், திருமணத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக கீர்த்திகாவும், அவரது தங்கை சர்மிளாவும் இருசக்கர வாகனத்தில் போரூரில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் அய்யப்பன்தாங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.பேருந்து மோதிய வேகத்தில் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது சர்மிளா, அதே அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது அக்காள் கீர்த்திகா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.விபத்து குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்தை ஓட்டி வந்த அய்யப்பன் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணக் கனவுகளுடன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்த இளம்பெண், திருமணப் பொருட்கள் வாங்கச் சென்றபோதே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
dream marriage Sister tragedy Young woman dies tragically after being trapped under wheels government bus Family tears