வெறும் 73 டாஸ்மாக் கடைதான் இருக்கு! மகளீர் இலவச பேருந்துகளை தமிழக அரசு நிறுத்தியதா? மாவட்ட ஆட்சியரின் அடுத்தடுத்த சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


மகளீர் இலவச பேருந்துகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய் இழப்பு காரணமாக பல வழித்தடங்களில் மகளீர் இலவச பேருந்துகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளதாக பேசிய நிலையில், திடீரென தான் பேசியதை ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஆட்சியர். 

தென்காசி மாவட்டம், வாடியூர் பகுதியில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். அதில், ஒன்று வாடியூர் கிராமத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த டாஸ்மார்க் கடைகள் மூலம் மது அருந்திய 9 பேர் பலியாகி, அவர்களின் மனைவிகள் விதவைகளாக மாறி உள்ளதாக புகார் அளித்தார். 

மேலும், 16 பேர் விபத்துகளில் அடிபட்டு ஊனமுற்றவர்களாக மாறி உள்ளதாகவும், இந்த டாஸ்மார்க் கடைகளை அகற்றுவதற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டினார்.

இதற்க்கு பதிலளித்த ஆட்சியர், தென்காசி மாவட்டத்தில் "வெறும்" 73 டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் 'வெறும் 73 டாஸ்மாக் கடைகள் தான்' செயல்படுவதாக தெரிவித்தது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 73 கடைகள் தான் இருக்கிறது என்றால், மேலும் கடைகளை உயர்த்த மாவட்ட ஆட்சியர் விருப்பப்படுகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

வாடியூர் ஊராட்சி மன்ற தலைவரின் இரண்டாவது கோரிக்கையாக, வாடியூர் பகுதிக்கு வருகின்ற அரசு இலவச மகளிர் பேருந்து இயக்கப்படவில்லை. அதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் தங்களது கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்க்கு பதிலளித்த ஆட்சியர், வாடியூர் மகளிர் இலவச பேருந்து வராததற்கு காரணம், போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் தமிழக அரசு இந்த பேருந்து சேவையை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தான் கூறியதை தவறாக சித்தரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், வாடியூருக்கு இரண்டு வருடங்களாக பேருந்து வசதி இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழித்தடத்தில் இலவச பேருந்து வசதி செய்து தரப்படும் என்று தான் நான் கூறியிருந்தேன். ஆனால் அதனை ஊடகங்கள் தவறாக செய்திகள் வெளியிட்டுள்ளன என்று விளக்கமளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thenkasi District Collector speech viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->