மது போதையில், கணவன் செய்த சம்பவத்தால் ரத்த வெள்ளம் பீறிட நிகழ்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் இருக்கும் ராயவேலூர் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (37) என்பவருக்கு அழகு சின்னு (31) என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். 

சண்முகவேலுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அன்றாடம் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அதுபோல நேற்று முன்தினம் இரவு மனைவியை தொந்தரவு செய்துள்ளார். பொறுத்துக் கொள்ள முடியாத அழகுசின்னு ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் கண்ணில் தூவி உள்ளார்.

அதன்பின் சண்முகவேல் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். தொடர்ந்து உச்சகட்ட கோபத்தில் இருந்த மனைவி அறிவாளை எடுத்து அவரது கை கால் மற்றும் தலையில் வெட்டி உள்ளார். இதனால் ரத்த வெள்ளம் பீறிட சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயரிழந்தார். 

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு மனைவி அழகுசின்னுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni women killed husband who drunk and attacked wife


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->