3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி! விசாரணையில் வெளிவந்த காதல் கதை!
theni student tried commit suicide jumping 3rd floor
தேனி, கொத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி (வயது 16) ஆண்டிபட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தபோது மரக்கிளையில் சிக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனை பார்த்த சக மாணவிகள் இதுகுறித்து ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இந்த மாணவி 10 ஆம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு தற்போது ஆண்டிபட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியில் சக மாணவர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவரும் வேறொரு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த மாணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள மாடியில் இருந்து குதித்துள்ளார்.
தற்போது காதலித்து வந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.
மாணவி காதலனுக்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
theni student tried commit suicide jumping 3rd floor