தமிழகம் | சாதி பெயரை சொல்லி திட்டிய 'புத்தர்' அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் மீது பாய்ந்தது வழக்கு.!
Theni School teacher venugobal case
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வைகை அணை சாலையில் புத்தர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் வேணுகோபால் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் வேணுகோபால் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் வீச்சுகருப்பனின் மகனை ஜாதி பெயரைசொல்லி திட்டிவுள்ளார்.

இது குறித்து அந்த மாணவன் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர், வீச்சுகருப்பன் இது குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தலைமை ஆசிரியர் வேணுகோபால் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Theni School teacher venugobal case