இரவோடு இரவாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு!
Theni Govt Bus Driver issue
நேற்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், பேருந்து ஓட்டுனர் ஒருவர் தேனி மாவட்டத்திற்கு பணி மாறுதலுக்காக தனது 6 மாத குழந்தையை அமைச்சரின் காலில் போட்டு கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் கடந்த 9 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனது மனைவி டெங்கு காய்ச்சலால் இருந்து விட்டதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் இரண்டு முறை பணி மாறுதலுக்காக கோரிக்கை வைத்து நிறைவேற்றவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் கண்ணனை, அவர் விருப்பப்படி பணியிட மாற்றம் செய்து நேற்றிரவே அரசு உத்தரவு பிறந்துள்ளது.

மனைவி இறந்துவிட்ட நிலையில் 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள வசதியாக தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என கண்ணன் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் அவருக்கு பணியிடை மற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Theni Govt Bus Driver issue