பாகிஸ்தானின் அத்துமீறல்...! அஜித் தோவல் மற்றும் பிரதமர் மோடியின் ஆலோசனை சந்திப்பு - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆப்ரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.இதில் பாகிஸ்தான் ராணுவம், கடந்த 3 தினங்களாக இந்திய எல்லைகளை கடுமையாக தாக்கி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.மேலும், எல்லையில் நேற்றிரவு முதல் பாகிஸ்தான் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதல்களில் அரசு அதிகாரி உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த பாகிஸ்தான் அத்துமீறலை தொடர்ந்து, பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு ''ரெட் அலர்ட்'' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தல் பகுதிகளுக்கு ''ரெட் அலர்ட்'' விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்புக்குழு தலைவர் ''அஜித் தோவல்'' சந்தித்து ஆலோசனை செய்தனர்.

எதிரி நாடான பாகிஸ்தானின் கடுமையான தாக்குதல்கள் தொடரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் 'அஜித் தோவல்' தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistans violation Ajit Doval and Prime Minister Modi hold consultation meeting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->