பாகிஸ்தானின் பயங்கரவாத ஏவுகணை ஏவுதளத்தை அடியோடு அழிப்பு...! - இந்திய ராணுவம்
Pakistan terrorist missile launch site completely destroyed Indian Army
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய ''ஆப்ரேஷன் சிந்தூர்'' பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைத்தது.இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 தினங்களாக இந்திய எல்லைகளை கடுமையாகத் தாக்கி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து அதிரடியான பதிலடி கொடுத்து வருகிறது.இதில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா அறவே முறியடித்தது.
மேலும் பாரமுல்லா, அவந்திப்புரா,ஸ்ரீநகர், ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ''டிரோன்'' தாக்குலை வானிலேயே இந்தியா அழித்தது.அதன் பிறகு, குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதைத்தொடர்ந்து, எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் எல்லைப்பகுதிகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில் டெல்லியை நோக்கி வந்த பாகிஸ்தானின் ''FATAH 1 '' நெடுந்தூர ஏவுகணையை, இன்று இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.
மேலும், பாகிஸ்தானின் சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளத்தை 'இந்திய ராணுவம்' தாக்கி அடியோடு அழித்தது. இதில் குறிப்பாக சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனி, அக்னூர் பகுதிக்கு எதிரே உள்ள பயங்கரவாத ஏவுதளம், எல்லைப் பாதுகாப்புப் படையினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
English Summary
Pakistan terrorist missile launch site completely destroyed Indian Army