தொடர் சரிவில் தங்கம் விலை...! சென்னையில் இன்று சவரன் விலை எவ்வளவு தெரியுமா...?
Gold Prices Continuous Decline Do You Know Price Sovereign Chennai Today
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை, சென்னையில் இன்று மீண்டும் குறைந்து நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில் சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனையான தங்கம், அதன் பிறகு படிப்படியாகச் சரிவைச் சந்தித்து வருகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,17,680 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,710 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் சுமார் 3,280 ரூபாய் வரை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி 4 ரூபாய் குறைந்து 276 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2,76,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 276 ரூபாயாகக் குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.
English Summary
Gold Prices Continuous Decline Do You Know Price Sovereign Chennai Today