செல்போனில் அடிக்கடி பேசியதால் காதலியை கொன்ற வாலிபர்..பரபரப்பான வாக்குமூலம்!
The young man who killed his girlfriend for frequently speaking on the cellphone a sensational testimony
என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகக் கூறிய அவர், வேறு சிலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் வாலிபர் காதலியை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.“
நெல்லை மாவட்டம் அயன்சங்கம்பட்டி சேர்ந்த மாரிமுத்து (26), சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்துவந்தவர். அவருக்கும் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாரிமுத்துவுக்கு போக்சோ வழக்கு பதியப்பட்டிருந்தது.
கடந்த 7-ந் தேதி மாலையில்வீரவநல்லூர் மில் அருகே காட்டுப்பகுதியில் சிறுமி இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் மர்மமாக இருந்த மாரிமுத்துவை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், சிறுமியும் காதலித்து வந்தோம். அவருக்காக நிறைய பணத்தை செலவு செய்தேன். ஆனால் என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகக் கூறிய அவர், வேறு சிலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.“சிறுமி வேறு நபர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசினதை கேட்டபோது அலட்சியமாக பதில் கூறினார். கோபத்தில் துண்டால் கழுத்தை இறுக்கி கொன்றேன்,” என கூறியுள்ளார்.
மேலும், மாரிமுத்துவுக்கு 2022-ல் தென்காசியில் நடந்த கொலை வழக்கும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
The young man who killed his girlfriend for frequently speaking on the cellphone a sensational testimony