"தேர்வு சரியாக எழுதவில்லை"... 3ஆம் வகுப்பு மாணவர்களை "மூங்கில் கம்பால்" வெளுத்துவாங்கிய ஆசிரியை..! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறி, மூன்றாம் வகுப்பு மாணவர்களை மூங்கில் கம்பால் சரமாரியாக ஆசிரியை அடித்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜீவா. இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வு வைத்துள்ளார். இதையடுத்து தேர்வில் மாணவ-மாணவிகள் சரியாக எழுதவில்லை என்று, மூங்கில் கம்பால் அனைவரையும் சரமாரியாக அடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பள்ளி முடிந்து மாலை வீட்டிற்குச் சென்று மாணவர்கள், பெற்றோரிடம் ஆசிரியர் மூங்கில் கம்பால் அடித்தது பற்றி கூறியுள்ளனர். மேலும் சில மாணவர்களின் தலை, கால்களில் காயங்கள் இருந்ததால் பெற்றோர் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The teacher hit the third class students with a bamboo horn in Tirupattur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->