சூடு பறக்க தொடங்கியது தமிழ்நாடு அரசியல்..அமித்ஷா இன்று நெல்லை வருகை...பாஜக தொண்டர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய மந்திரி அமித்ஷா இன்று நெல்லை வருகிறார்.

நெல்லை மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் இன்று முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டங்கள் நடைபெறவுள்ளது .இந்தநிலையில் இது தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நெல்லை  வருகிறார்.

அவர், கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்குகிய பிறகு அங்கிருந்து  பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

அதன்பின்னர் மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிசாலை வழியாக விழா மேடைக்கு சென்று  இந்த மாநாட்டில் கலந்துகொண்டு அமித்ஷா சுமார் ஒருமணி நேரம் பேசுகிறார்.அப்போது அங்கு பா.ஜனதா தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார்

மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The political turbulence has started in Tamil Nadu Amit Shah is visiting Nellai today BJP workers are enthusiastic


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->