சண்டையை சமரசம் செய்ய சென்றவர் படுகொலை; 3 பேர் செய்த செயலால் அதிர்ச்சி!
The person who went to mediate the fight was brutally killed 3 people shocked by the act
சண்டையை சமரசம் செய்ய சென்ற கிரிக்கெட் வீரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒரே குடும்பத்தின் 3 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல்நிலவூர் கிராம பகுதியை சேர்ந்தவர் ஆண்டி . விவசாய பணி செய்துவந்த இவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு உள்ளூரில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல கோப்பைகளை வென்றுள்ளார்.
இவருடைய மனைவி சிந்தாமணி . இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆண்டியின் தம்பி குமார் மற்றும் அதே ஊரை சேர்ந்த ராம்ராஜ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் எருக்கம்பட்டு பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.அப்போது எதிரே காரில் வந்த அதே கிராம பகுதியை சேர்ந்தவரான பிரபுதேவன் என்பவர், குமார் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதுவதுபோல் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பிரபுதேவன் ஊருக்கு வந்ததும், அவரிடம் குமாரும், ராம்ராஜூம் இதுபற்றி கேட்டுள்ளனர். அதற்கு பிரபுதேவன் அவர்களை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர், அன்று இரவு குமார் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தடியில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த பிரபுதேவன், அவரது தந்தை அழகேசன், தாய் வெள்ளி ஆகியோர் குமாரை தாக்கியுள்ளனர். இதைபார்த்த குமாரின் அண்ணன் ஆண்டி அவர்களை தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் ஆத்திரம் தீராத பிரபுதேவன் மற்றும் அவருடைய பெற்றோர் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து வந்து ஆண்டியின் தலையில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆண்டி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பிரபுதேவன் மற்றும் அவருடைய பெற்றோர் என 3 பேரையும் தேடி வருகின்றனர்.
English Summary
The person who went to mediate the fight was brutally killed 3 people shocked by the act