பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரன்., கடலூரில் நடந்த அவலம்..!! - Seithipunal
Seithipunal


பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காமகொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது பாரூக் (42). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 மகளும் உள்ளனர். குவைத்தில் வேலை பார்த்து வந்த இவர் 3 ஆண்டுகளுக்கு முன் நாடு திரும்பியுள்ளார்.

கடந்த ஒரு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் இவரது மகள்கள் தந்தையின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், பாரூகின் இளைய மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அந்த புகாரில் தனது தந்தை தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்ததை அடுத்து அந்த காமகொடூரனை கைது செய்தனர். பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father who sexually abused his daughter


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal