'பழனி அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர்கள் 25 பேரை மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து நீக்கக் கூடாது'; நீதிமன்றம் உத்தரவு..!
The court has ordered that 25 temporary employees of the Palani Government Hospital shall not be removed from service until further orders are issued
பழனி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தற்காலிக பணியாளர்கள் 25 பேரை பணி நீக்கம் செய்ய தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனியை சேர்ந்த எம்.நாச்சிமுத்து, ம.மரகதம் உள்ளிட்ட 25 பேர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், ''நாங்கள் பழனியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல ஆண்டுகளாக தற்காலிக தூய்மை பணியாளர், செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறோம்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் ஒப்பந்தம் புதிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் எங்களுக்கு பணி வழங்க மறுக்கிறது.
எங்களை வெளியேற்றி விட்டு புதிதாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து கேட்டதற்கு நாங்கள் குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை வழங்கக்கோரிய வழக்கு தாக்கல் செய்திருப்பதால் வேலை வாழங்க முடியாது என்கின்றனர்.

எனவே, எங்கள் 25 பேரையும் பழனி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் திருமுருகன் வாதிட்டார். அதன் பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது;
பழனி அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக தூய்மைப் பணியாளர், செவிலியர் உதவியாளர்களாக பணிபுரிந்து வரும் மனுதாரர்கள் 25 பேரையும் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து நீக்கக் கூடாது என்றும், மனு தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகள் இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என்றும் குறித்த விசாரணை ஒத்திவைக்கப்படுதாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The court has ordered that 25 temporary employees of the Palani Government Hospital shall not be removed from service until further orders are issued