சிபிஎஸ்இ பாட முறையை முழுமையாக கொண்டு வரவேண்டும்.. மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாட முறையை முழுமையாக கொண்டு வந்ததை மறுபரிசீலனை செய்து மாணவர்கள் விரும்பி படிக்க வழிவகை செய்யும் வழியில் அனைத்து அரசு பள்ளியிலும் தமிழ் வழி பாட முறையையும் கொண்டுவர வேண்டுமென புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில்  கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர், அப்போது அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சிபிஎஸ்இ பாடத் தேர்வில் பிளஸ் டூ பாட வகுப்பில் 90% தேர்ச்சி பெற்றதற்கு எமது அமைப்பின் சார்பில் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டோம். அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களிலேயே தேர்ச்சி பெற்றிருப்பதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்த ஆசிரியர்கள் பணியில் இல்லாததே காரணம், மேலும் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பெருமளவில் ஒரு சில பாடத்தில் மட்டும் மாணவர்கள் தோல்வியை தழுவி இருப்பதற்கும் தகுதியான ஆசிரியர்கள் இல்லாததே காரணம் என எடுத்துரைத்தோம்.

தோல்வி பட்டியல் வெளியாகி உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அப்பாட ஆசிரியர்களின் தகுதியை உறுதிப்படுத்த வேண்டுகோள் வைத்தோம்.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வந்த ஆசிரியர்கள் பலர் தாங்கள் பணி செய்த பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி விகிதாச்சாரத்தை கொடுத்துள்ளனர். தற்போது அவர்களது ஒப்பந்தம் முடிந்துவிட்ட காரணத்தினால் வெளியேற்றப்பட்டுள்ளனர், அவர்களை மீண்டும் பணி அமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

மேலும் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாட முறையை முழுமையாக கொண்டு வந்ததை மறுபரிசீலனை செய்து மாணவர்கள் விரும்பி படிக்க வழிவகை செய்யும் வழியில் அனைத்து அரசு பள்ளியிலும் தமிழ் வழி பாட முறையையும் கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டோம். 

மாணவர்கள் விரும்பி படிக்கும் வாய்ப்பை புதுச்சேரி கல்வித்துறை பறித்துள்ளதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகிறோம். இதனால் ஏழை எளிய ,அரசு பள்ளியை நம்பி படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். புதுச்சேரி மாநிலத்தின் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அரசு பள்ளிகளில் தமிழ் வழி பாட முறையும் கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துக் கொள்கிறோம் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The CBSE curriculum should be fully implemented Students demand collective emphasis


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->