பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரத்தில் காலி ஏரி கையகப்படுத்தலை எதிர்த்து வழக்கு: நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை..! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்த பகுதியில் 05 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்த படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலி ஏரி நீர் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கமலக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தவுள்ள 5,747 ஏக்கர் பரப்பில், 26.54 சதவீதம் நீர்நிலைகள் உள்ளதாகவும், இதனால், ஏகனாபுரம் மக்கள் தங்கள் பாசன வசதிக்காக காலி ஏரியை மட்டும் நம்பியுள்ளனர். வருவாய் துறை உத்தரவின்படி, நீர்நிலைகளை, விவசாயம் சாராத பயன்பாட்டுக்காக மறுவகைப்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், ஏரியை சேதப்படுத்துவது என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நியாயமற்ற செயலாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ஏகனாபுரம், காலி ஏரியை விவசாயம் சாராத பணிகளுக்காகவோ, வர்த்தக பயன்பாட்டுக்காகவோ வகைமாற்றம் செய்யக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். குறித்த மனு மீதான விசாரணை நாளை நீதிபதி முகமது சபிக் முன்பு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The case against the acquisition of empty Lake in Ekanapuram for the construction of Paranthur Airport will be heard in the Madras High Court tomorrow


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->