9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய காதலன்! காதலன் பெயரை சொல்ல சிறுமி மறுப்பு! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் மாவட்டம் அருகே 9 வகுப்பு மாணவி கர்ப்பமான சம்பவத்தில் காதலன் பெயரை சிறுமி கூறவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போது சிறுமியும் வாலிபர் ஒருவரும் பழகி வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியை அந்த காதலன் அவ்வப்போது சிதம்பரம் அருகே சுற்றியுள்ள இடங்களுக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த சிறுமி வீட்டில் இருக்கும் பொழுது திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், மாணவியை அழைத்து சென்று கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதனை செய்ததில், மாணவி 2 மாத கர்ப்பிணியாக இருந்ததுள்ளார் என தெரியவந்தது. இஇந்த தகவலின் அடிப்படையில் மகளிர் போலீசார், அந்த மாணவியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர் . 

அப்போது அந்த மாணவி காதலன் பெயரை சொல்ல மறுப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் இந்த வாலிபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தடுமாறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அடையாளம் தெரியாத அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boyfriend who made the 9th grade student pregnant The girl refused to tell her boyfriends name Police investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->