கடலூர் அருகே பரபரப்பு.! 11ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற சிறுவன்.! போலீசார் வலைவீச்சு
The boy kidnapped the 11th class girl in Cuddalore
கடலூர் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவியை சிறுவன் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை அணைத்து இடங்களிலும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்காத நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெற்றோர் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தப்பட்ட மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The boy kidnapped the 11th class girl in Cuddalore