தவெக கூட்டணி அரசியல் சர்ச்சை: பரம எதிரி திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைவது சரியா? விஜய்க்கு சேரன் கேள்வி!
Thaweka alliance political controversy Is it right for arch rival DMK to join alliance parties Cheran questions Vijay
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான ஆதரவை திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தவெக ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை எட்டுவதற்காக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது. தற்போதைய கணக்குப்படி, தவெகவுக்கு 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலை தொடர்கிறது.
இந்த நிலையில், விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதற்கு எதிராக பல்வேறு அரசியல் தரப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவையே தவிர, ஆளுநர் மாளிகை அல்ல” என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இந்த சூழலில் இயக்குநரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், “108 தொகுதிகளில் மக்கள் நேரடியாக ஆதரவு அளித்து வெற்றி பெற்ற தவெக, தேர்தல் களத்தில் எதிரியாகச் சித்தரித்த திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை இப்போது ஏற்குவது அரசியல் ரீதியாக சரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “காங்கிரஸ் வென்ற 5 தொகுதிகளிலும் திமுக வாக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்ற கேள்வி எழுகிறது. அப்படியிருக்க, அந்த ஆதரவை தவெக ஏற்கும் போது அது அரசியல் செய்தியின் பொருளை மாற்றிவிடுகிறதா?” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், “மக்கள் திமுக எதிர்ப்பு மனநிலையில்தான் விஜய்க்கு வாக்களித்திருந்தால், அதே திமுக அணியுடன் தொடர்புடைய ஆதரவுகளைப் பெறுவது மக்கள் தீர்ப்பின் உண்மையான நோக்கத்துக்கு எதிரானதா?” என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.
இறுதியாக, “108 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியமைக்க அனுமதி வழங்குவது அல்லது பெரும்பான்மை இல்லை என்றால் மறுதேர்தலை சந்திப்பது – இந்த இரண்டில் ஒன்றுதான் மக்கள் தீர்ப்பை மதிக்கும் சரியான ஜனநாயக நடைமுறை” என்றும் சேரன் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
சேரனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி அரசியலின் நடைமுறை மற்றும் மக்கள் ஆணையின் பொருள் குறித்து பல்வேறு கோணங்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.
English Summary
Thaweka alliance political controversy Is it right for arch rival DMK to join alliance parties Cheran questions Vijay