தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள்!
Thank you to the Tamil Nadu Chief Minister from the Tamil Nadu IT hostel owners
நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையானஒற்றை சாரளமுறை தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்தனர்.
அமல்படுத்திய தமிழக முதல்வருக்கும், துறையின் அமைச்சர், கீதா ஜீவன் அவர்களுக்கும் துறை செயலாளர் மற்றும் விடுதி சார்ந்த அலுவலர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தொடர்ச்சியாக கோரிக்கை மனு அளித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் விடுதிகளுக்கு உரிமை வழங்குதல் திட்டத்தினை வகுத்துக் கொடுத்த நிலையில் முதல்வருக்கு எங்களது மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்து சென்னை ஓஎம்ஆர் நாவலுலூரில் இருந்து தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை அரசு அலுவலகம் காவல் நிலையம் மற்றும் விடுதி சம்பந்தமான அனைத்து அரசுஅலுவலகங்களுக்கும் நேரில் சென்று இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மாநில தலைவர் லயன் ஏ. சீதாராமன் அவர்கள் கூறுகையில் தமிழக முதல்வர் எளிமை, ஆளுமை திட்டத்தின் கீழ் எங்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும்
உள்ள 25 ஆயிரம் விடுதி உரிமையாளர்கள், மற்றும் 2 லட்சம் ஊழியர்கள், 20 லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள் என தங்கும் விடுதி, ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் சாமானிய மக்கள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை பயன்பெற்று வருவதாகவும் கூறினார் மேலும் விடுதிகளுக்கு உரிமம் வழங்குதலை ஒற்றை சாரள முறையில் அறிவுத்தமைக்கு முதல்வருக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அது மட்டுமல்ல கடை கோடியில் உள்ள கிராம பெண்கள் மற்றும் ஆண்கள் இந்த விடுதினால் பெரும் பயன் அடைவதாக கூறினார். தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொருளாளர் துணைத் தலைவர் துணைச் செயலாளர் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
Thank you to the Tamil Nadu Chief Minister from the Tamil Nadu IT hostel owners