கோவையில் பயங்கரம்...! அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து...! - ஒருவர் உடல் நசுங்கி பலி!
Terrible accident Coimbatore Government bus and car collide head on One person crushed death
கோவை மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி பகுதியில் இருந்து கோவையை நோக்கி அரசு பேருந்து வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அந்த பேருந்து கோவில்பாளையம் அருகே வந்தபோது, எதிர்திசையில் வந்த கார் மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்து அந்த பகுதியையே பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஹரிசங்கர் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களால் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணம் செய்த ஹரீஸ் மற்றும் மல்லிகார்ஜூனன் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் காாவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், உயிரிழந்த ஹரிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து தொடர்பாக அரசு பேருந்தை இயக்கிய தமிழரசன் என்பவரை காாவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து தொடர்ந்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
English Summary
Terrible accident Coimbatore Government bus and car collide head on One person crushed death