நேருக்கு நேர் மோதிய கார் - வேன்.! பயணிகளின் நிலை என்ன?
ten peoples injured for accident in kavunthapadi
நேருக்கு நேர் மோதிய கார் - வேன்.! பயணிகளின் நிலை என்ன?
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து ஐந்து பேருடன் வேன் ஒன்று கோபி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து இந்த வேன் ரங்கன்காட்டூர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது கவுந்தப்பாடி நோக்கி வந்துக் கொண்டிருந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேன் மற்றும் காரில் பயணம் செய்த 10 பேர் பலத்தக் காயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே காவல்துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
ten peoples injured for accident in kavunthapadi