எக்ஸ்பிரஸ் ரெயில் கழிவறையில் தற்கொலை செய்துகொண்ட வாலிபர்: பின்னணியில் அதிர்ச்சி!
teenager committed suicide express train toilet
அசாம், கவுகாத்தியிலிருந்து பெங்களூரு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
வேலூர், காட்பாடி ரயில் நிலையம் அருகே இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது எஸ்8 என்ற பெட்டியில் இருந்த ஒரு பயணி கழிவறைக்குள் சென்று நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சக பயணிகள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் உள்ளே இருந்து எந்த விதமான சத்தமும் வராததால் பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாரிடம் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக கழிவறையின் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் பிளாஸ்டிக் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்டவர் நேபாளத்தைச் சேர்ந்த சந்திரஜித் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர் பெங்களூருக்கு வீட்டு வேலைக்காக நண்பர்களுடன் வந்துள்ளார் எனவும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் 15 நிமிடத்திற்கு மேல் நின்று தாமதமாக புறப்பட்டதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
teenager committed suicide express train toilet