சிறையில் இருந்து வெளியே வந்த வாலிபர் குத்தி கொலை! கஞ்சா வியாபாரிகளுடன் முன் விரோதமா?
teenager came out prison stabbed death
குடியாத்தம் அருகே ஜெயிலில் இருந்து வெளியே வந்த வாலிபர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், குடியாத்தம் நேரு நகரச் சேர்ந்தவர் இம்ரான் (வயது 29) இவர் கஞ்சா விற்பனை வழக்கில் குடியாத்தம் நகர போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தார்.
இந்நிலையில் இம்ரான் நேற்றிரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் தாக்கினர்.

இதில் இம்ரானுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இம்ரானை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பெயரில் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் தெரிவித்திருப்பதாவது, 'கஞ்சா விற்பனையில் இம்ரானுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இவரது எதிரிகள் யார், கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
இம்ரானின் செல்போன் அழைப்புகளை சேகரித்து ஆய்வு நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்' என தெரிவித்தனர்.
English Summary
teenager came out prison stabbed death